full screen background image

மறைமுகமாக சந்தானத்தைத் தாக்கிப் பேசிய டி.ராஜேந்தர்..!

மறைமுகமாக சந்தானத்தைத் தாக்கிப் பேசிய டி.ராஜேந்தர்..!

‘ராட்டினம்’ என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் படம் ‘கல்கண்டு.’ இதில் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். டிம்பிள் சோப்டே என்னும் புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர், “நகைச்சுவை நடிகர்கள் மக்களை மட்டும் சிரிக்க வைக்கக் கூடாது… அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிபாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும்.

சில நகைச்சுவை நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். அது நியாயம்தானா..? என்னிடம் 1500 ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரு நகைச்சுவை நடிகர் இன்று கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம். நான் அவர் பின்னால் போனதில்லை.

அந்தக் காலத்தில் நகைச்சுவை நடிகர்கள் ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் படத்தில் நடித்தே அந்த தயாரிப்பாளரையும் மக்களையும் சிரிக்க வைத்தார்கள். ஆனால் இன்று தயாரிப்பாளரை அழ வைத்து, மக்களை சிரிக்க வைக்கிறார்கள் இந்த நகைச்சுவை நடிகர்கள்..” என்றார்.

அந்த நகைச்சுவை நடிகர் யாரென்று அவர் சொல்லாவிட்டாலும் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் தான் அறிமுகப்படுத்திய சந்தானத்தைத்தான் டி.ஆர். சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..!

அன்றைக்கு சந்தானம் ஒரு புதுமுகம். அதனால் அந்தச் சம்பளத்தை வாங்கினார். ஆனால் இன்றைக்கு அவருக்கென்று தனி மார்க்கெட் இருக்கிறது.. தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆகவே சம்பளத்தை கோடியில் கேட்கிறார். கட்டுப்படியாகும் தயாரிப்பாளர்கள் கொடுக்கிறார்கள்..

எந்த நடிகரும் தயாரிப்பாளர்களை கத்தியைக் காட்டி மிரட்டியோ, துப்பாக்கியை கா்டடி மிரட்டியோ சம்பளம் கேட்பதில்லையே..? இது தயாரி்பபாளர்களாக இழுத்துக் கொள்வதுதானே.. ‘கொடுக்க முடியாது போடா’ன்னுட்டு போக வேண்டியதுதானே..? கேட்கும் தொகையை ஏன் கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்..!? எப்படியும் போட்ட காசை அள்ளிரலாம்னு நினைச்சுத்தானே..? அப்போ நடிகர்களும் கேட்கத்தானே செய்வார்கள்.. இதிலென்ன தவறு இருக்கிறது..?

தயாரிப்பாளர்களிடத்தில் கேட்க வேண்டிய கேள்வியை சந்தானத்திடம் கேட்டிருக்கிறார் டி.ராஜேந்தர். அவரின் இந்தத் தாக்குதல் தேவையற்றது..!

Our Score