கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘கே.ஜி.எப். சாப்டர்-1’. இந்தப் படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார் நடிகர் யஷ்.
இந்த நிலையில் நடிகர் யஷின் நடிப்பில் ‘சூர்ய வம்சி’ என்ற தமிழ்த் திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்த ‘சூர்ய வம்சி’ திரைப்படத்தை மஞ்சு சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.மஞ்சு தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் யஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ராதிகா பண்டிட்டும், வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் ஷாமும் நடித்திருக்கிறார்கள்.
மற்றும் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆண்ட்ரூ, இசை – ஹரிகிருஷ்ணா, கலை இயக்கம் – T.ஸ்ரீனிவாஸ், படத் தொகுப்பு – K.M.பிரகாஷ், இணை தயாரிப்பு – ஷபீர் பதான், தயாரிப்பு – கே.மஞ்சு, இயக்கம் – மகேஷ் ராவ்.
துணிச்சலான இளைஞனான யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ராதிகா யஷ்ஷை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார். ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்ஷிற்கு தெரிய வருகிறது. ஷாம் ஒரு மிகப் பெரிய டான்.. அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பவர். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக்சன் என கமர்ஷியல் பார்முலா கலந்து படமாக்கி இருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராவ்.
இந்த ‘சூர்ய வம்சி’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.