லிங்குசாமியின் ‘அஞ்சான்’ படத்தில் ஹீரோ சூர்யாவும் ஒரு பாடலை பாடியிருக்கிறாராம். துணைக்கு ஆண்ட்ரியாவாம்.. பாடலை எழுதியிருப்பது நா.முத்துக்குமார்..
குத்துப் பாடலுக்கு ஏற்ற ரகத்தில், இலக்கியத்தையே தொடாமல் லோக்கல் பாஷையிலேயே எழுதித் தள்ளியிருக்கிறாராம் நா.முத்துக்குமார்..
இதற்கு சூர்யாவும், ஆண்ட்ரியாவும் இறக்கமான குரலில் பாடிக் கொடுக்க.. பாடலே ஒரு கிறக்கத்தைத் தந்திருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் லிங்குசாமி..
பாடலின் துவக்க வரிகள் இதுதான் :
“ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி…
நா ஒண்ணொண்ணா சொல்லித் தரேன். கத்துக்கடி..
நீ சாய்ஞ்சி பாத்தா சுத்துதடி..
நெஞ்சில் தீயா பத்துதடி..!”
தியேட்டரில் இந்தப் பாடல் அப்ளாஸ் அள்ளப் போவது உறுதி என்கிறார் இயக்குநர் லிங்குசாமி.
சரி.. ஏதோ நடத்துங்க.. கமர்ஷியல் படத்துல இதெல்லாம் சகஜம்தான..!?