full screen background image

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் போஸ்டர் வெளியானது..!

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் போஸ்டர் வெளியானது..!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஜெய் பீம்’.

பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். இயக்குநர் டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார்.

அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைக்கும் ஒரு விஷயம், இந்தப் படத்தின் நாயகனாக, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பதுதான்.

இந்த மோஷன் போஸ்டர், படத்தின் களம் எதைப் பற்றியது என்பதற்கான ஆழமான ஒரு முன்னோட்டத்தைத் தருகிறது. உயர்ந்த ஆளுமைகளின் உருவப் படங்கள் நிறைந்திருக்கும் நீதிமன்றத்தைச் சுற்றிய ஒரு மெய்நிகர் பயணத்தை இது காட்டுகிறது. மேலும் இந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பற்றிய ஒரு பார்வையையும் இந்த போஸ்டர் காட்டுகிறது.

இந்தப் படத்தைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டும்விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

வரும் தீபாவளி தினமான நவம்பர் 2-ம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜெய் பீம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

Our Score