full screen background image

சூரிக்கு இரண்டாவது ஜோடி தேவிப்பிரியா..!

சூரிக்கு இரண்டாவது ஜோடி தேவிப்பிரியா..!

நரேன் – சூரி இணைந்து நடிக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தில் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் சீரியல் நாயகி தேவிப்பிரியா.

ரியல் எஸ்டேட் விளம்பரத்துக்காக தஞ்சாவூர் அருகே உள்ள கன்னந்தங்குடி கிராமத்துக்கு வருகிறார் தேவிப்பிரியா. சீரியல் ப்ரியரான சூரி தேவிப்பிரியாவைப் பார்க்க கையில் மிகப் பெரிய மாலையைக் கட்டிக்கொண்டு ஆவலோடு வருவார். ஆனால், கூட்டம் கடுமையாக முண்டியடித்து சூரியை அருகே நெருங்க விடாமல் செய்துவிடும்.

இதில் மிகவும் மனம் வெறுத்துப்போன சூரியை நண்பர்கள் மனதைத் தேற்றி அழைத்து வருவார்கள். ஆனால், அதில் சமாதானம் ஆகாமல் தேவிப்பிரியாவை காரோடு கடத்திக்கொண்டு போய் விடுவார் சூரி.

தன் அபிமான நாயகி தேவிப்பிரியாவுக்கும் அவருக்கும் நடக்கும் மோதல் படத்தில் மிகப் பெரிய காமெடி காட்சியாக வந்திருக்கிறது. முதலில் மோதிக்கொள்ளும் தேவிப்பிரியாவும் சூரியும் பிறகு சமாதானமாகி நண்பர்களாகிவிடுவார்களாம். படத்தில் சூரிக்கு ஜோடியாக சந்தியா நடனமாடி இருக்கும் நிலையில், சூரிக்கு இரண்டாவது ஜோடியாக தேவிப்பிரியா நடித்திருக்கிறாராம்.

Our Score