சென்னை கடற்கரை சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை எப்போது அகற்றுவது என்பது பற்றி இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கடற்கரை சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரததிற்கு இடையூறாக இருப்பதாக பொதுநலன் கருதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்ப்ட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது அந்த சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக அரசுத் தரப்பும் ஒத்துக் கொண்டது. ஆனால் அதை மாற்றி வேறு இடத்தில் வைப்பதற்கு கால அகவாசம் கேட்டது.
மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அரசு சிலையை அகற்றாததால் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அப்போதும் இனிமேல் கட்டப் போகும் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில்தா்ன் அந்த சிலையை வைக்கப் போகிறோம். அதனால் அதுவரையிலும் சிலையை அகற்ற கால அவகாசம் கேட்டது அரசுத் தரப்பு. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
ஆரம்பக் கட்ட விசாரணையிலேயே அந்த சிலையை அகற்ற அரசுத் தரப்பு கேட்ட 2 ஆண்டு காலக் கெடுவை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். எப்போது சிலையை அகற்றப் போகிறீர்கள் என்பது பற்றி இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.