full screen background image

ரசிகர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினி..

ரசிகர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினி..

வருடந்தோறும் புத்தாண்டு தினத்தன்றும், தன்னுடைய பிறந்த நாளன்றும் சென்னையில் இருக்க மாட்டார் ரஜினி. கடந்தாண்டில் இருந்து அவரது இந்த நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு பிறந்த நாளில் போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களை சந்தித்து சந்தோஷப்படுத்தினார்.

இன்றைக்கு ஆங்கில புத்தாண்டையொட்டி தலைவர் வீட்டில் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட அவரது ரசிகர்கள் திரளாக வந்து தலைவருக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று சொல்ல.. போயஸ் கார்டனே காலையில் அல்லலோகப்பட்டுவிட்டது.

சீக்கிரமாக அவர்களை அனுப்பி வைக்க வேண்டுமாய் போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதால், காலை 11 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினி அங்கே தயாராய் இருந்த ஒரு சிறிய மேடையில் ஏறி நின்று தனது ரசிகர்களை பார்த்து கும்பிட்டார். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு விடைபெற்றார்.

Our Score