full screen background image

சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்..!

சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்..!

உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். பல ஆண்டுகள் ஆங்கில நீலப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவருடைய நீலப் படங்களுக்காகவே உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.

சமீப ஆண்டுகளாக நீலப் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட சன்னி, இந்தியா வந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். ‘வ குவார்ட்டர் கட்டிங்’ என்கிற தமிழ்ப் படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு மட்டுமே நடனமாடியிருக்கிறார் சன்னி.

இப்போது, முதன் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தில்  நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்தின் சார்பில் தன்னுடைய முதல் படமாக இதை தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இந்தப் படத்தை பிரபல இயக்குநரான வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நாசர், நவதீப் ஆகியோருடன் பிரபல நடிகர் ஒருவரும் கதாநாயகனாக நடிப்பார் என தெரிகிறது.

இன்னும் தலைப்பிடப்படாத இந்த படம், மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாகும்.

சன்னி லியோன் அவரின் அடையாளமாக இருக்கும் கிளாமர் ரூட்டில் இனி பயணிப்பதில்லை என்ற தைரியமான முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

சரித்திரம் சம்பந்தமான இந்தப் படத்தில் நடிக்க கத்திச் சண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டை கலைகளையும் கற்று வருகிறார் சன்னி லியோன். இதற்காகவே ஆந்திராவில் இருந்து ஒரு சிறப்பு பயிற்சியாளர் மும்பைக்கு போய் சன்னி லியோனுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இந்த பிரம்மாண்டமான  படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சன்னி லியோன். இந்தப் படத்தில் 70 நிமிட காட்சிகளுக்கு கிராபிக்ஸ் தேவைப்படுகிறதாம். இதற்காக பாகுபலி, 2.0 படங்களில் பணி புரிந்த கம்பெனிகளை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் தலைப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடிக்கவிருப்பது பற்றிப் பேசிய நடிகை சன்னி லியோன், “இந்தப் படத்துக்கு பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். இயக்குநர் வி.சி.வடிவுடையான் இந்த கதையை எனக்கு சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்கு தயாராக ஆரம்பித்து விட்டேன். தென்னிந்தியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்தியாவில் எனக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளாது, குறிப்பாக ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்..” என்றார். 

பிப்ரவரியில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது படத்தின pre production வேலைகள் மற்றும் செட் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

Our Score