full screen background image

நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது..!

நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது..!

நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் தீபாவளியன்று அமேஸான் பிரைம் வீடியோவில் நடிகர் சூர்யாவின் ‘சூரறைப் போற்று’ திரைப்படம் வெளியாகவிருக்கும் சூழலில் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார். ஏற்கெனவே சூர்யா தயாரிப்பில் உருவான ‘பசங்க-2’ படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோல் மட்டுமே செய்திருந்தார். ஆனால் இப்போது பாண்டிராஜின் இயக்கத்தில் நாயகனாகவே நடிக்கவிருக்கிறார். இது பாண்டிராஜ் இயக்கும் 10-வது திரைப்படமாகும்.

ஏற்கெனவே ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்திலும் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

இதற்கெல்லாம் முன்னதாக, மின்னல் வேகத்தில் 2021 ஜனவரியில் துவங்கி 2021 ஏப்ரல் 14-ல் வெளியாகும் அளவுக்கு துரிதமாக இந்த சன் பிக்சர்ஸின் திரைப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score