‘எட்டுத்திக்கும் மதயானை’ திரைப்படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம் வெளியிடுகிறது..!

‘எட்டுத்திக்கும் மதயானை’ திரைப்படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம் வெளியிடுகிறது..!

‘ராட்டினம்’ என்ற அழகான, அற்புதமான படத்தைக் கொடுத்த இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி. அடுத்து படங்கள் வந்து குவியும் என்று எதிர்பார்த்தவருக்கு ‘நல்ல படம்தான்.. அவார்டு படம் மாதிரியிருக்கு’ என்கிற பேச்சோடு, தன்னை தானே விளம்பரப்படுத்த்த் தெரியாததினாலும் வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

காத்திருந்து சலித்துப் போனவர், இனியும் ஏன் காத்திருக்க வேண்டும்..? நாமளே தயாரித்தால் என்ன என்கிற தைரியத்தில் தானே சொந்தமாக அடுத்தப் படத்தை துவக்கி தயாரித்து முடித்துவிட்டார். ‘எட்டுத்திக்கும் மத யானை’ படத்தின் டைட்டில்.

இதில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். புதுமுகம் ஸ்ரீமுகி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். மனு ரம்பீசன் இசை அமைத்துள்ளார். ஆர்.ஜே.ஜெய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த வருடமே ரிலீஸுக்குத் தயாராக இருந்த நிலையில் பல பெரிய பட்ஜெட் படங்களும், செல்வாக்கானவர்களின் படங்களும் ரிலீஸ் வரிசையில் நின்றதால் இப்படம் வெளிவர தாமதமாகிவிட்டது.

இப்போது ஸ்டூடியோ 9 நிறுவனம் இந்த ‘எட்டுத்திக்கும் மத யானை’ படத்தை வாங்கி வெளியிடுகிறது. படம் வருகிற பிப்ரவரி 27-ம் தேதி வெளிவருகிறது.

வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score