‘சலீம்’ மற்றும் ‘தர்மதுரை’ போன்ற வெற்றி படங்களை தயாரித்தும், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘தங்க மீன்கள்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை விநியோகம் செய்த ஸ்டுடியோ-9 நிறுவனம் புதிதாக இசை வெளியீட்டு துறையிலும் களமிறங்குகிறது.
தரமான படங்களுக்கு உறுதுணையாக இருந்து வந்த ஸ்டுடியோ-9 நிறுவனம் தற்போது தயாரிப்பாளர்களுக்கு மேலும் உதவி செய்யும் வகையில் ‘ஸ்டுடியோ-9 மியுசிக்’ என்கிற பெயரில் திரைப்பட பாடல்களை வெளியிடும் நிறுவனத்தை துவங்கியுள்ளது.
இதன் முதன் தொடக்கமாக புதுமுகங்கள் நடிப்பில் விறுவிறுப்பான திரைக்களத்தில் விரைவில் வெளிவரவுள்ள ‘அட்டு’ எனும் படத்தின் இசையை விமரிசையாக வெளியிடவுள்ளது ‘ஸ்டுடியோ 9 மியுசிக்’ நிறுவனம்.
‘அட்டு’ படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், “புதுப்பேட்டை’, ‘ரேணிகுண்டா’ போன்று இந்தப் படமும் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை அருமையாக படம் பிடித்துள்ளது என்றும், ‘அட்டு’ படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா திரைக்கதையை விறுவிறுப்பாகவும் அதே நேரம் அனைத்துவிதமான ரசிகர்களை கவரும்படியும் படத்தை இயக்கியிருக்கிறார்..” என்று கூறினார்.
மேலும், “தர்மதுரை’ படத்தின் வெற்றிக்கு பிறகு வெளியாகும் இப்படம் தனது ஸ்டுடியோ-9 தயாரிப்பு நிறுவனத்திற்கு மேலும் ஒரு மகுடம் சூட்டும்…” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
‘அட்டு’ படத்தின் அதிகாரப்பூர்வ இசை மற்றும் படம் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.