சாப்பிட உட்கார்ந்த நேரத்தில், வாழை இலையை இழுத்துப் போட்டு சண்டைக்கு இழுத்த மாதிரி ஆயிருச்சு தயாரிப்பாளர் கவுன்சில்ல நடிக்குற சண்டை..
இன்று நடந்த ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், “தயாரிப்பாளர் சங்கம் எடுத்திருக்கும் விளம்பரச் செலவின் உச்சபட்சம் 40 லட்சம்தான் என்கிற முடிவை, எப்போதோ எடுத்திருக்கணும்.. இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கு. அவங்க சீக்கிரமா செய்யணும்..” என்றார்.
இதனை கேட்டுவிட்டு, ஏற்கெனவே பேசி முடித்திருந்த நிலையில் மீண்டும் எழுந்து வந்து மைக்கை பிடித்த தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவாவின் பேச்சில் அநியாயத்திற்கு வருத்தம்.. “கேயார் தலைமைல ஜெயிச்ச டீம் பதவில இருக்கலாம்.. ஆனா பெரிய முடிவுகளை எடுக்கக் கூடாதுன்னு சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்த் தரப்பு ஒரு தடையாணை வாங்கி வைச்சிருக்காங்க.. அதுனாலதான் தயாரிப்பாளர் சங்கத்துல ஒரு உருப்படியான முடிவைக்கூட எடுக்க முடியாமல் இருக்கு..” என்று பெரிதும் வருத்தப்பட்டு கொண்டார். “வர்ற 11-ம் தேதி கேஸ் ஹியரிங்குக்கு வருது. அதுல அந்தத் தடையாணை நீக்கப்பட்டு நல்ல முடிவு வரும்னு நம்புறோம். அது வந்திருச்சுன்னா அதுக்கப்புறம் நாம நினைச்ச நல்லவைகள் அனைத்தையும் செய்வோம்”ன்னாரு..
கல்யாணத்துக்கு வந்தா ஒண்ணு சாப்பிட விடுங்கய்யா.. இல்லை மொய் வைக்காம போங்கன்னு சொல்லுங்கய்யா.. சாப்பாடும் போடாம… மொய் மட்டும் வைக்கணும்னு மிரட்டுனீங்கன்னா எப்படி..?