CCL Cricket என்றழைக்கப்படும் Celebraty cricket league மாதிரி, இப்போது புதிதாக Stars Cricket League நடத்தப் போகிறார்களாம்..
தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கமும் Helping Arts Foundation-ம் இணைந்து இந்த போட்டியை நடத்தவுள்ளார்கள்.
சின்னத்திரை, பெரிய திரைகளில் நடித்த சிறிய நடிகர்கள்.. வசதி வாய்ப்பற்ற நடிகர்களுக்கு உதவி செய்யும் பொருட்டே இந்த பவுண்டேஷன் அமைக்கப்பட்டுள்ளதாம்..
இந்த பவுண்டேஷனுக்கு நிதி திரட்டும் விதமாக சின்னத்திரை நடிகர்களுக்கும், பெரிய திரை நடிகர்களுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்..
இதில் பெரிய திரையைச் சேர்ந்த நடிகர்களும், சின்னத்திரையைச் சேர்ந்த நடிகர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள முன் வந்துள்ளனர்.
பெரிய திரையின் சார்பாக வெங்கட்பிரபு, ஷாம், பரத், எஸ்.பி.பி.சரண், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், மகேந்திரன், சஞ்சீவ், உதய், அனூப், ஆதவ் கண்ணதாசன், விஷ்ணுவர்த்தன், அசோக், சரண் ஆகியோர் விளையாட இருக்கிறார்களாம்..
சின்னத்திரையின் சார்பாக சதீஷ், விஷ்வா, சேத்தன், பாலாஜி , பானு, விவேக், விஜய் ஆனந்த், தினகர், தேவ், நரேந்திரா, கோபிகர், மது, ஓஏகே தேவர், ஈஸ்வர், ஜெயந்த், தருண், ஸ்ரீதரன் மற்றும் பலரும் இடம் பெறுகிறார்களாம்.. இந்தப் போட்டி அடுத்த மாதம் நடைபெறப் போகிறதாம்..
இதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து சின்னத்திரை, பெரிய திரையைச் சேர்ந்த நலிந்த நிலையில் இருக்கும் நடிகர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்யவிருக்கிறார்களாம்..!
இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி இன்றைக்கு சென்னையில் நடந்துள்ளது. இதில் பெரிய திரை நடிகர்கள் சங்கத் தலைவர் ராதாரவி, சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
நாலு பேருக்கு நல்லதுன்னா எது வேண்ணாலும் செய்யலாங்கண்ணா..!