ஹைகிரீவா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.கிருஷ்ணன், P.R. சேதுராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஸ்ரீராமானுஜர்’. ஸ்ரீபெதும்புதூரில் பிறந்த ஸ்ரீரங்கத்தில் மறைந்த வைணவப் பெரியார் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை பதிவாக பல கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகிறது.
ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் நடிக்கிறார். ஷ்ரேயா, பீவீ நாச்சியார் என்கிற வேடமேற்று நடிக்கிறார். டெல்லியை ஆண்ட பாதுஷாவின் மகளாக வேடமேற்றிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் தமிழ்ப் படம் இது. மற்றும் ராதாரவி, நிழல்கள் ரவி, ஸ்ரீமன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி. மகேந்திரன், பி.ஆர்.சேதுராமன் ரங்கராஜான் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
பக்திப் பரவசமாக இருக்கக் கூடிய இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் மறைந்த வித்தகக் கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைக்க தகுதியுள்ள ஒரேயொருவர் நம் இசைஞானி இளையராஜாதான். அவரேதான் இசையமைக்கவிருக்கிறாராம்..
ஒளிப்பதிவு – பிரமூர் தாஸ்
எடிட்டிங் – பொன் மூர்த்தி
கலை – மகி
நடனம் – அஜய்ராஜ்
வசனம் – ஸ்ரீரங்கம் ரங்கமணி
தயாரிப்பு நிர்வாகம் – பம்மல் சீனிவாசன்
தயாரிப்பு மேற்பார்வை – சௌரி ராஜன்
தயாரிப்பு – T.கிருஷ்ணன், P.R. சேதுராமன்
இயக்கம் – ரவி V. சந்தர்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம். “சாதி வேறுபாடற்ற சமுதாயம் எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக போதித்த மகானைப் பற்றிய பதிவே ‘ஸ்ரீ ராமானுஜர்’. இப்படத்திற்காக பிரம்மாண்டமான அரங்குகள் ஏவி.எம்.மில் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..” என்றார்.