மீண்டும் படம் இயக்குகிறார் நடிகை ஸ்ரீபிரியா..!

மீண்டும் படம் இயக்குகிறார் நடிகை ஸ்ரீபிரியா..!

நடிகை ஸ்ரீபிரியா மீண்டும் ஸ்டார்ட், கட் சொல்ல தயாராகிவிட்டார். ஆனால் இப்போது தமிழில் அல்ல.. தெலுங்கில்..

சமீபத்தில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘திருஷ்யம்’. மலையாள சினிமா வரலாற்றிலேயே முதல்முதலில் 50 கோடி வசூலைத் தாண்டியது இந்தப் படம்தான். மோகன்லாலுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இதில் தெலுங்கு ரீமேக்கைத்தான் நடிகை ஸ்ரீபிரியா இயக்கவுள்ளார். இதில் ஹீரோவாக வெங்கடேஷ் நடிக்கவிருக்கிறார். இவருடன்  மீனாவும், நதியாவும் நடிக்கிறார்கள்.. முழுக்க முழுக்க கேரளாவிலேயே இந்தப் படத்தை ஷூட் செய்யப் போகிறார்களாம். 

இவருடைய இயக்கத்தில் சமீபத்தில்தான் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்ற படம் வெளியாகியிருந்தது. இதுவும் ’22, பீமேல் கோட்டயம்’  என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்குதான். இது ஸ்ரீபிரியா இயக்கும் 5-வது படமாகும்..

‘திருஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார். ஆனால் இதனை மலையாளத்தின் ஒரிஜினல் படத்தை இயக்கிய ஜீத்து ஜோஸப்பே இயக்கவிருக்கிறார்.. கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிக்கவிருக்கிறாராம்..!

ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு மற்ற தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்படுகிறது எனில் இதன் கதை மேல் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் பாருங்கள்..! 

Our Score