நடிகர் ஸ்ரீகாந்தின் சொந்தத் தயாரிப்பில் ‘சாமியாட்டம்’

நடிகர் ஸ்ரீகாந்தின் சொந்தத் தயாரிப்பில் ‘சாமியாட்டம்’

தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி பெற்று வணிக ரீதியாக வசூல் செய்த படமான ‘சுவாமி ரா ரா’ படத்தை தமிழில் ‘சாமியாட்டம்’ என்ற பெயரில் தயாரிக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். ஏற்கனவே ஸ்ரீகாந்த், ’நம்பியார்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இது இவரது தயாரிப்பில் இரண்டாவது படம்.

இலகுவான கதை, மிருதுவான காட்சிகள், வேடிக்கையான சம்பவங்கள், கேலி, கிண்டல் என ஜாலி பேச்சுகள், விறுவிறுப்பான திரைக்கதை என ஜாலி வேடிக்கை வினோதப் படம்தான் இந்த ‘சாமியாட்டம்’.

இந்தப் படத்தை மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குகிறார். தனுஷின் ஆஸ்தான இயக்குநரான இவர், தனுஷை வைத்து எடுத்த ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, உத்தமப்புத்திரன்’ ஆகிய படங்களை அடுத்து நான்காவதாக இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன். இவர் ‘யுவன் யுவதி’, ’என்னமோ ஏதோ’ படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஷ்வரன். சுமார் 400 விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார். இது இவரது முதல் படம். 5 பாடல்கள் இதில் உள்ளன. விவேகா உள்பட சில கவிஞர்கள் எழுதுகின்றனர் படத்தொகுப்பு – தியாகராஜன், ஸ்டண்ட் – ஹரி, தளபதி தினேஷ்

“படத்தின் கதை வெகு எளிமையானது. சொல்லும்விதத்தால் அது ரசிக்க வைக்கும்படி வேடிக்கையாகியிருக்கிறது. களவு போகும் தொன்மையான பிள்ளையார் சிலை பலரிடம் கை மாறி பல சுவாரஸ்யப் பயணங்களை மேற்கொள்கிறது. அந்த பயணம் சார்ந்த காமெடி கலாட்டாதான் இந்தப் படத்தின் கதை. காணாமல் போன பிள்ளையாரின் கோணத்தில், பார்வையில் சொல்லப்படும் விதம் தனி சுவை. ‘It is a Fun Film” என்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர்.

இதில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கிறார். மும்பை பெண் ஒருவர் நாயகி. எஸ்.எஸ்.மியூசிக் பூஜா, முருகதாஸ், சம்பத், தெலுங்கு நடிகர் ஜீவா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கியமான ஒரு வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார். ஸ்ரீகாந்த், பூஜா, முருகதாஸ் மூவரும் கூட்டுக் களவாணிகள். இவர்கள் சேர்ந்தே திருடவது வழக்கம். இவர்கள் கையில் திருட்டுப் போன தொன்மையான பிள்ளையார் சிலை கிடைக்க அந்த சாமி படுத்தும் பாடு அடக்க முடியாத சிரிப்பு காட்சிகளாகின்றன.

குறுகிய காலத் தயாரிப்பாக ‘சாமியாட்டம்’ வளர்ந்து வருகிறது. சென்னை, பாண்டிச்சேரியில்தான் படப்பிடிப்பு நடக்கிறது. 10 நாட்கள் முடிந்து அடுத்த பயணத் திட்டத்துக்கு தயாராகவுள்ளனர் படக் குழுவினர்.

Our Score