full screen background image

“அது நானல்ல..!” – சங்கடத்துடன் அறிக்கை விட்டிருக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா..!

“அது நானல்ல..!” – சங்கடத்துடன் அறிக்கை விட்டிருக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா..!

பெயர் குழப்பத்தினால் மிகப் பெரிய சங்கடத்தில் சிக்கிக் கொண்டார் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த பாலியல் தொடர்பான வழக்கில் திவ்யாஸ்ரீ என்ற தெலுங்கு நடிகை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு மூன்று தெலுங்கு நடிகர்களையும் சேர்த்தே கைது செய்தனர். இந்த திவ்யாஸ்ரீ ‘பிடெக் பாபு’ என்கிற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தவர். ஹைதராபாத் போலீஸார் இது தொடர்பாக சரியான தகவல்களைத்தான் மீடியாக்களுக்கு வழங்கினார்கள்.

ஆனால் எங்கோ ஏஸி அறைக்குள் உட்கார்ந்து கூகிளாண்டவர் துணையுடன் கதை எழுதிக் கொண்டிருக்கும் ரிப்போர்ட்டர்கள், மற்றும் துணை ஆசிரியர்களுக்கு இதெல்லாம் தெரியாதல்லவா..

யாஹூ.காம்.. இணையத்தில் எந்த வகையில் பிரபலம் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுடைய சினிமா இணையத்தளத்தில் இந்த பாலியல் கைது வழக்கு தொடர்பான செய்தி ஒரு வீடியோ செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோ செய்தி இதுதான் :

இந்தச் செய்தியில் உண்மையாகவே கைதான திவ்யாஸ்ரீ-க்கு பதிலாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹரீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

‘அந்தப் புகைப்படம் தவறு.. இவரல்ல அவர்.. அவர் திவ்யாஸ்ரீ’ என்றெல்லாம் அந்தச் செய்தியின் பின்னூட்டத்தில் பலரும் கமெண்ட்டுகளை பதிவு செய்த பின்னும் யாஹூ நிறுவனம், இந்த நிமிடம்வரையிலும் அந்தச் செய்தியை மாற்றவில்லை.. நீக்கவும் இல்லை.

இப்போது ஸ்ரீதிவ்யா தனது மறுப்புரையை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். “அது நானல்ல.. தவறுதலாக எனது பெயரை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்…” என்று..!

வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டிய யாஹூ நிறுவனமோ இப்போதுவரையிலும் கும்பகர்ணத் தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது..!

வெட்கக்கேடு..!

Our Score