உலகத்தின் பல நாடுகளில் உடம்பில் ஒரு இடம்கூட விடாமல் அனைத்து இடங்களிலும் எதையாவது கிறுக்கி வைத்துக் கொள்வது பேஷனாகிவிட்டது..
இது இப்போது இந்தியாவில் பரவி உடலில் டாட்டூ வரைந்து கொள்வது நம்மூரிலும் அதிகமாகிவிட்டது.
முதலில் த்ரிஷாதான் இதனை ஆரம்பித்துவைத்தார். பின்பு நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை தன் கையில் டிஸைனாக வரைந்து கொண்டார். தமிழ் நடிகை ஐஸ்வர்யாகூட தனது முதுகில் ஓவியம் வரைந்திருக்கிறார். நடிகை குஷ்புவும் தனது முதுகில் தனது மகள்களின் பெயரை எழுதியிருக்கிறார். லட்சுமிராயும் இதில் அடக்கம்.
லேட்டஸ்ட்டாக இதில் செளந்தர்யா ரஜினிகாந்தும் இடம் பிடித்திருக்கிறார். தனது அப்பா, அம்மா பெயரை தனது கையில் டிஸைனாக எழுதியிருக்கிறார். Latha Rajini என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். தனது அப்பா அம்மா மீதான பாசத்தை வெளிப்படுத்தும்வகையில் இதனைச் செய்திருக்கிறாராம். தனது டிவி்டடர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார் செளந்தர்யா.
ஒரேயொரு படத்தின் மூலம் மிகப் பெரிய பாராட்டுதல்களை பெற்றுக் குவித்திருக்கும் செளந்தர்யாவின் இந்த நன்றியெல்லாம் பாசத்துக்குரியது..!