full screen background image

6 பிலிம்பேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம்

6 பிலிம்பேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம்

நேற்று இரவு பெங்களூரில் நடந்து முடிந்த 2021-ம் ஆண்டு சிறந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கான பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சியில் சூர்யாவின் சூரரைப் போற்று’ திரைப்படம் 6 விருதுகளை வாங்கியது.

இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ஆகாசம்’ பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

மேலும், சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம்’ திரைப்படமும் 2 விருதுகளை வென்றுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடித்திருந்த லிஜோ மோல் ஜோஸ் சிறந்த நடிகைக்கான விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதினை த.செ.ஞானவேலும் பெற்றனர்.

அத்துடன் பா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற சார்பட்டா பரம்பரை’ படமும் மூன்று விருதுகளை வென்றது. இந்தப் படத்தில்  ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதில் ஹீரோவாக நடித்த ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘நீயே ஒலி’ என்ற பாடல் வரிகளை எழுதிய தெருக்குரல் அறிவு’க்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதும் வழங்கப்பட்டது.

  •  
Our Score