full screen background image

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத சில சாதனைகள்..!

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத சில சாதனைகள்..!

இந்தியாவின் முதல் அறிவியல் படம் ‘கலையரசி’ தமிழ்ப் படம்.

இந்தியாவிலேயே ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெற்ற முதல் நடிகை தமிழ் நடிகையான கே.பி.சுந்தராம்பாள்தான்.

இந்தியாவில் இருமுறை ஆஸ்கர் விருதை வென்ற ஒரே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

உலகிலேயே அதிக திரைப்படங்களில் நடித்த துணை நடிகை ‘ஆச்சி’ மனோரமா.

உலகிலேயே அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளவர் ‘இசைஞானி’ இளையராஜாதான்.

உலகிலேயே நூறு மற்றும் அதற்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய மிகச் சில இயக்குநர்களுள் ஒருவர் தமிழ் இயக்குநர் ராம நாராயணன்.

இந்தியாவிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த மிகச் சில தயாரிப்பு நிறுவனங்களுள் இரண்டு தமிழக நிறுவனங்கள் ஏவி.எம் மற்றும் மாடர்ன் தியேட்டர்ஸ்.

இந்தியாவின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம், தமிழ்ப் படமான “இரவின் நிழல்”.

இந்தியாவிலேயே அதிக கெட்டப்களில் நடித்த முதல் நடிகரும், சிறப்பு ஒப்பனைக்காகவே நீண்டநேரம் ஒதுக்கி ஒப்பனை செய்து கொண்ட முதல் நடிகரும் நம்பியார்தான் (படங்கள் :  திகம்பர சாமியார், நெஞ்சம் மறப்பதில்லை).

இந்தியாவிலேயே படத்தைத் தயாரிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே, படத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பளத்தை வழங்கிய ஒரே திரைப்பட தயாரிப்பாளரும், படத்திற்குப் பூஜை போடும்போதே வெளியீட்டுத் தேதியை அறிவித்து, அதே தேதியிலேயே வெளியிட்ட ஒரே திரைப்பட தயாரிப்பாளரும் சாண்டோ சின்னப்பா தேவர்தான்.

இந்தியாவிலேயே, சமூக எழுச்சிக்கு வித்திடுவதாகக் கூறி, பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட முதல் படம் தமிழ்ப் படமான தியாக பூமி.

இந்தியாவின் முதல் டால்பி தொழில் நுட்பத்தில் வெளியான திரைப்படம் தமிழ்ப் படம் கமல்ஹாசனின் “குருதிப் புனல்”.

இந்தியாவிலேயே, ஒரே நாளில் தயாரிக்கப்பட்ட படம் “சுயம்வரம்” என்ற தமிழ்ப் படம்தான்.

இந்தியாவிலேயே ஐந்து வேடங்களிலும், மூன்று வேடங்களிலும் நடித்த முதல் நடிகர் பி.யு.சின்னப்பாதான் (படங்கள்−ஜகதலப்பிரதாபன், மங்கையர்க்கரசி).

இந்தியாவிலேயே, இறுதிவரை, திரைப்பட தயாரிப்பில் சர்வாதிகார பாணியைக் கையாண்டு, வெற்றி கண்டு, மிகவும் பிரபலமானவர் தமிழரான மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் மட்டுமே..!

இந்தியாவிலேயே, இரண்டே நாட்களில், ரீ ரிகார்டிங் இசை, முழுவதுமாக அமைக்கப்பட்டது என்ற சிறப்புப் பெற்ற திரைப்படம் “சிகப்பு ரோஜாக்கள்”.

இந்தியாவிலேயே நீண்டகால தயாரிப்பிலிருந்து வெளியான முதல் படம், அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட முதல் படம், வட இந்தியாவில் பெரும் வெற்றி பெற்ற முதல் தென்னிந்திய படம், பெரிய கட் அவுட் வைக்கப்பட்ட முதல் படம் என்ற பல சிறப்புகளைக் கொண்ட படம் தமிழ்ப் படமான “சந்திரலேகா”(1948).

இந்தியாவிலேயே அதிக (சுமார் 1000) படங்களுக்கு சண்டை பயிற்சிகளை அமைத்துள்ளவர், தமிழரான “ஜுடோ”ரத்னம் அவர்கள்.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை, முதன்முதலில் பெற்றவர் கே.வி.மஹாதேவன் ‘கந்தன் கருணை’ படத்திற்கு இசையமைத்ததற்காக, அவருக்குக் கிடைத்தது.

இந்தியாவிலேயே மிக நீளமான பெயரைக் கொண்டுள்ள படம், தமிழ்ப் படமான “ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்”.

இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குநர், தென்னிந்தியாவின் முதல் நாயகி நடிகை என்ற பெருமைகளுக்கு உரியவர், தமிழ் நடிகையான டி.பி.ராஜலட்சுமிதான்.

முதன்முதலாக அனிமேஷன் காட்சி இடம் பெற்ற தமிழ்ப்படம் “ராஜா சின்ன ரோஜா”.

Our Score