இந்திய சினிமாவில் எல்லோரும் அறியப்பட்டவர் விஜய் யேசுதாஸ். பாடகர் ஏசுதாஸின் மகனான இவர் பின்னணி பாடகராக இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடியவர், பின்னர் நடிக்கவும் களமிறங்கினார். அதன்படி தனுஷ் படத்தில் முக்கியமாக ‘மாரி’ படம் மூலமாக அறிமுகமானார். அதன் பின் சில படங்களில் நடித்து வந்த விஜய் ஏசுதாஸ், தற்போது நடித்திருக்கும் படம் ‘சால்மன்’.
விஜய் ஏசுதாஸ் நடித்திருக்கும் இந்த ‘சால்மன் 3-டி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட 7 மொழிகளில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
அதோடு, இந்தப் படம் மூலமாக விஜய் யேசுதாஸ், பான் இந்திய நடிகர் என்ற என்ற பெருமைக்குரிய நடிகராகவும் மாறியுள்ளார். இந்தப் படத்தை. ஷலீல் கல்லூர் இயக்கி உள்ளார்.
இந்தப் படம் ஒரே சமயத்தில் ஏழு மொழிகளிலும் வரும் ஜூன் 30-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது.










