நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஆக்சன் கிங் அர்ஜுன், தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் படத்தைத் தனது ஸ்ரீராம் ஃபிலிம் இண்டர்நெஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி, இயக்கியுள்ளார்.
இந்த ‘சொல்லி விடவா’ திரைப்படத்தில் இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். நடிகர் சந்தன் முதன்முறையாகத் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
மற்றும் பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத், சுஹாசினி, பிரகாஷ்ராஜ், ‘மொட்டை’ ராஜேந்திரன், மனோபாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு – நிகில், கலை இயக்கம் – சீனு, சண்டை பயிற்சி – ‘Kick Ass’ காளி, இசை – ஜெஸ்ஸி கிப்ட், ஒளிப்பதிவு – H.C.வேணு கோபால், படத் தொகுப்பு – கே.கே., கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – அர்ஜுன்.
முன்பு ‘காதலின் பொன் வீதியில்’ என தலைப்பிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் பெயர், தற்போது ‘சொல்லி விடவா’ என மாற்றப்பட்டுள்ளது.
இளமை ததும்பும் காதல், கலர்புல் காமெடி, அனல் பறக்கும் ஆக்சன், சுவையான திருப்பங்கள் என அனைத்து ரசிகர்களையும் கவரக் கூடிய வகையில் சுவாரஸ்யங்களுடன் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இறுதிக் கட்ட பணிகளை நெருங்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.