full screen background image

ஆக்சன் கிங் அர்ஜூன் இயக்கியிருக்கும் புத்தம் புதிய காதல் கதை ‘சொல்லி விடவா’..!

ஆக்சன் கிங் அர்ஜூன் இயக்கியிருக்கும் புத்தம் புதிய காதல் கதை ‘சொல்லி விடவா’..!

‘முதல்வன்’, ‘ஜென்டில்மேன்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘ஜெய்ஹிந்த்-2’ போன்ற தேசப்பற்றுமிக்க திரைப்படங்களின் நாயகனான ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் ‘சொல்லி விடவா.’

இந்தப் படத்தில் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக புதுமுகம் சந்தன் குமார் அறிமுகமாகிறார்.

ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், கதையின் தேவைகேற்ப பெரும் நட்சத்திரங்களான சுகாசினி, இயக்குநர் கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் தங்களது இயல்பானப் பங்களிப்பின் மூலம் கதைக்கு வலு சேர்த்துள்ளார்கள். மேலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சதீஷ், மற்றும் யோகிபாபுவின் நகைச்சுவை விருந்து, படத்திற்கு இனிமை சேர்க்கிறது.

ஹெச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜெஸ்சி கிப்ட் இசை அமைக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஹரிணி, சத்யபிரகாஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் பாடல்களை பாடியிருக்கிறார்கள். மதன் கார்க்கி, விவேகா, பா. விஜய் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். படத் தொகுப்பு – கே.கே., நடன பயிற்சியை சின்னி பிரகாஷும், கணேஷ் ஆச்சார்யாவும் மேற்கொண்டுள்ளனர்.

Sollividava Movie Stills (3)

தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தின் கதைக் களம் வெகு சுவாரசியமானது. இதுவரையிலும் திரையில் காணாத வகையில், முற்றிலும் புதிய பின்னணியில் இந்தக் கதை பயணிக்கிறது.

ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி, எப்படி தங்கள் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதை அனைவரும் ரசிக்கும்வகையில் வெகு நேர்த்தியாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அர்ஜூன்.

சென்னை, தர்மசாலா, ஹைதராபாத், கேரளா மற்றும் வட இந்தியாவில் பல அருமையான இடங்களில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது,

இத்திரைப்படம் வரும் தீபாவளியன்று வெள்ளித் திரைக்கு வருகிறது..!

Our Score