full screen background image

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தேர்தல் கலாட்டாக்கள்..!

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தேர்தல் கலாட்டாக்கள்..!

பெரிய திரை நடிகர் சங்கத் தேர்தலுக்கு சற்றும் குறைவில்லாமல் இப்போது சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதுபோல வரும் அக்டோபர் 12-ம் தேதியன்று இந்தச் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தேர்தல் நடைபெறவிருக்கிறது.

சென்ற ஆண்டு போலவே இந்தாண்டும் இத்தேர்தலால் சின்னத்திரை நடிகர், நடிகையர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய தலைவர் நடிகர் ராஜேந்திரன் தலைமையில் ஒரு அணி, நடிகை நளினியின் தலைமையில் ஒரு அணி, நடிகர் ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையில் ஒரு அணி என மூன்று அணிகள் தேர்தலில் அணி வகுத்து நிற்கின்றன.

ஒரு தலைவர், செயலாளர், பொருளாளர், 2 துணைத் தலைவர், 4 இணைச் செயலாளர், 14 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் கமிட்டிக்கு இந்த மூன்று அணிகளைச் சேர்ந்தவர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

நடிகர் ராஜேந்திரன் அணியில் தலைவர் பதவிக்கு ராஜேந்திரன் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ரவிவர்மாவும், பொருளாளர் பதவிக்கு கே.எஸ்.ஜி.வெங்கடேஷும் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர் பதவிக்கு வின்சென்ட் ராய், ராஜசேகர் இருவரும் போட்டியிடுகிறார்கள். இணைச் செயலாளர் பதவிக்கு சதீஷ், தேவ் ஆனந்த், மீனா குமாரி, ஷியாம் சுந்தர் ஆகிய நான்கு பேர் போட்டியிடுகிறார்கள்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குமரேசன், சாந்தி வில்லியமஸ், ஜெயந்த், கே.லஷ்மி பிரசன்னா, பிர்லா, எஸ்.பி.செந்தில்வேலன், எம்.சுவாமிநாதன், டாக்டர் டி.கிரிதரன், டி.வி.வி.ராமானுஜம், எஸ்.காமேஷ்குமார், எஸ்.கனகப்பிரியா, எஸ்.ரமா, கே.பி.அண்ணாதுரை, டி.ஜெயந்த் மாதவ் ஆகிய 14 போட்டியிடுகின்றனர்.

smallscreen-nalini-team

நடிகை நளினியின் அணியில் நளினி தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். ‘பூவிலங்கு மோகன்’ செயலாளர் பதவிக்கும், வி.டி.தினகரன் பொருளாளர் பதவிக்கும், ராஜ்காந்த், மனோபாலா ஆகிய இருவரும் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். பாபூஸ், பரத், கன்யா பாரதி, சாதனா ஆகிய நால்வரும் இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

smallscreen-actors-union-election-nalini-team

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ஜி.நந்தகுமார், என்.எம்.விஜய் ஆனந்த், கெளதமி, அரவிந்த், ஆதித்யா, நித்திஷ், லஷ்மிராஜ், சத்யா, நவீந்தர், பிரேம், எஸ்.ரூபஸ்ரீ, வினோதினி, சந்தோஷி, ரேகா சுரேஷ் ஆகிய 14 பேர் போட்டியிடுகின்றனர்.

smallscreen-actor-union-2-sivan-team

நடிகர் ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். எம்.டி.மோகன் செயலாளர் பதவிக்கும், பரத் கல்யாண் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர் பதவிக்கு புவனேஸ்வரியும், கஜேஸும், இணைச் செயலாளர் பதவிக்கு ரிஷிகேஷ், ரம்யா, அறந்தாங்கி சங்கர், டி.சிவக்குமார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

smallscreen-actor-union-1sivan-team

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தளபதி தினேஷ், சந்திரா லஷ்மண், என்.சிவராமன், எம்.பால்ராஜ், பி.ஆர்.ஆர்.மணிவண்ணன், ஏ.வேல்முருகன், வி.மங்களநாதன், பி.கே.ஸ்வப்னா, சி.சரத் சந்திரா, வி.ஜி.ஸ்ரீதரன், எம்.விஜயலட்சுமி, வாசவி, வி.கார்த்திக், வி.ரமேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வரும் அக்டோபர் 12-ம் தேதி விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில் இருக்கும் AKR கல்யாண மண்டபத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் வாக்குப் பதிவு நடைபெறும். முக்கிய பதவிகளுக்கான ஓட்டுக்கள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். செயற்குழு உறுப்பினர்களுக்கான ஓட்டுக்கள் மறுநாள் எண்ணப்படும்.

அக்டோபர் 13 அல்லது அக்டோபர் 14 அன்று புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது..

இப்போது ஒவ்வொரு நடிகர், நடிகையரின் செல்போனிலும் மெஸேஜ்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. மூன்று அணிகளும் த்த்தமது அணிக்காக பொதுவான ஒரு மெஸேஜையும், மற்றும் போட்டியிடுபவர்கள் பலரும் தனித்தனியாக மெஸேஜையும் அனுப்பிக் கொண்டேயிருக்க.. பலரது செல்போன்கள் ஹேங்காகும் லெவலில் இருக்கிறதாம்..

சிலரது வீடுகளுக்கு நேரில் சென்று கேன்வாசிங் வேலைகளெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். பலருக்கும் தொலைபேசியில் பேசி ஓட்டுக்கள் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நடிகை நளினி வீடியோவில் ஓட்டுக் கேட்டு, அதனை யூடியூபில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.

சென்ற வருடம் போட்டியிட்டு தோற்றுப் போனாலும் மீண்டும் இந்த வருடமும் முழு முயற்சியாக களத்தில் குதித்திருக்கிறார் நடிகர் சிவன் சீனிவாசன். தற்போதைய தலைவர் ராஜேந்திரனின் தலைமையில் சென்ற வருடம் போட்டியிட்ட நிர்வாகிகளில் 10 பேர் தற்போது நளினியின் அணிக்குத் தாவி விட்டார்களாம்.. ஆக.. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் தற்போது இது போன்ற கலைஞர்களின் சங்கங்களிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது..!

இவ்வளவு கடுமையான போட்டிகள் இருக்கிறதே.. சங்கம் ரொம்ப ‘வெயிட்டோ’ என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை. இன்னமும் வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வருகிறது.. உறுப்பினர்களின் சந்தா கட்டணத்தில்தான் அலுவலகப் பணிகளும் நடந்து வருகின்றன.

பிறகெதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் என்கிறீர்களா..? அதுதான் அதிகாரம். ஒரு முறை அதிகாரத்தை ருசித்துப் பார்த்துவிட்டால் அது நம்மையும் விடாது.. அடுத்தவருக்கு போவதையும் விடாது.. இதுதான் மனித குணம்..! 

Our Score