full screen background image

சின்னத்திரையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – நடிகை குஷ்பூ அறிவிப்பு..!

சின்னத்திரையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – நடிகை குஷ்பூ அறிவிப்பு..!

சின்னத்திரை தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பற்றி சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கமுத்திடம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலாளரான நடிகை  குஷ்பூ, பொருளாளர் டி.ஆர்.பாலேஷ்வர், பெப்ஸி அமைப்பின் தலைவர் ஜி.சிவா, செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், பொருளாளர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரான நடிகை குஷ்பு இன்று வெளியிட்டார்.

IMG_2068

இது குறித்து குஷ்பூ பேசும்போது, “வெகு நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த சின்னத்திரை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு இன்று நடந்த பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் சின்னத்திரை மிகவும் நலிந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை மனதில் வைத்துதான் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் முடிவில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கமும், பெப்ஸியும் ஒரு சுமூகமான முடிவுக்கு வந்து சின்னத்திரை தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம் யாதெனில் இந்த முறை சின்னத்திரையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 27.5% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது இது மூன்று வருடங்களுக்கு தொடரும். இந்த ஊதிய உயர்வு இன்று முதலே அமலுக்கு வருகிறது. இதன் மூலம் திரைப்படத் துறையின் ஏழு பிரிவுகளைச் சேர்ந்த 5000 தொழிலாளர்களுக்கும் மேல் பயனடைவார்கள்.“ என்றார். 

Our Score