full screen background image

சி்ன்னத்திரை நடிகர் சங்கத்தில் 3 அணிகள் மோதுகின்றன..!

சி்ன்னத்திரை நடிகர் சங்கத்தில் 3 அணிகள் மோதுகின்றன..!

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தேர்தல் சூடு பிடித்திருக்கிறது.

நடிகை நளினி தலைமையிலான நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டேயிருந்ததால் அந்த நிர்வாக அமைப்பில் இருந்து அனைத்து நிர்வாகிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் சங்கத்திற்கு உடனடியாக தேர்தல் வைத்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

இந்த முறை மூன்று அணிகள் மும்முரமாக களத்தில் நிற்கின்றன. ‘புதிய அலைகள் அணி’ என்கிற தலைப்பில் பானுபிரகாஷ் தலைமையில் ஒரு அணியும்,  ‘உழைக்கும் கரங்கள் அணி’ என்கிற தலைப்பில் நடிகர் ரவி வர்மாவின் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமையில் ஒரு அணியுமாக போட்டியிடுகின்றனர்.

IMG-20151130-WA0017

IMG-20151130-WA0018

IMG-20151130-WA0019

1300 வாக்களிக்கும் தகுதியுள்ள உறுப்பினர்கள் உள்ள இந்த சங்கத்தின் தே்ர்தல் வரும் டிசம்பர் 13-ம் தேதி விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏகேஆர் கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அன்று மாலையே வாக்குகள் எ்ண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுமாம்.

Our Score