குறும்பட உலகத்திற்கு புதிய வரவு ‘ஸ்கெட்ச்’ என்ற குறும்படம்.
இந்த குறும்படத்தில் கதாநாயகனாக ‘முருகா’, ‘பிடிச்சிருக்கு’, ‘கோழி கூவுது’ புகழ் நடிகர் அசோக் குமார் நடித்துள்ளார். இவர் தவிர ‘சுந்தர பண்டியன்’ புகழ் காசி மாயன் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் போக இப்படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர் திரைபடங்களில் நடித்தவர்கள்.
25 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த குறும்படத்தை எழுதி-இயக்கி இருக்கிறார் சாய். இது இவருக்கு முதல் குறும்படம்.
இந்த ‘ஸ்கெட்ச்’ சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்கு பேர் சேர்ந்து ‘ஸ்கெட்ச்’ போட்டு 24 மணி நேரத்தில் ஹீரோவை கடத்த முயற்சிகிறார்கள். அவர்கள் ஏன், எதற்காக ஹீரோவை கடத்த முயற்சிகிறார்கள் என்பதுதான் சஸ்பென்ஸ். இவர்கள் சூழ்ச்சியை ஹீரோ கண்டுபிடித்து தப்பித்தாரா இல்லையா என்பதுதான் கதை.
சுமார் 3.5 லட்ச ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தக் குறும்படத்திற்கே இப்போது டிரெயிலரை வெளியிட்டு அசத்தியிருக்கிறது படக் குழு.
வரும் ஜூன் 14 அன்று மாலை 3 மணியளவில் வடபழனி RKV studio-வில் இந்த குறும் படம் திரையிடப்படவுள்ளது.