full screen background image

விக்ரம்  நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ பொங்கலன்று வெளியாகிறது..!

விக்ரம்  நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ பொங்கலன்று வெளியாகிறது..!

மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமான செலவில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘ஸ்கெட்ச்.’

இந்தப் படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக தமன்னா நடித்துள்ளார்.  மற்றும் சூரி,  ஆர்.கே.சுரேஷ்,  அருள்தாஸ்,  மலையாள நடிகர் ஹரீஷ்,  ஸ்ரீமன், மதுமிதா,  விஷ்வாந்த்,  பாபுராஜா,  வினோத்,  வேல ராமமூர்த்தி,  சாரிகா  ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் இன்னொரு முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார்.

இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – சுகுமார், பாடல்கள் – கபிலன்,  விவேக்,  விஜய்சந்தர், கலை – மாயா பாண்டியன், படத் தொகுப்பு – ரூபன், நடனம் -பிருந்தா,  தஸ்தாகீர், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன், தயாரிப்பு நிர்வாகம்  -V.ராமச்சந்திரன், தயாரிப்பு – மூவிங் பிரேம், கதை,  திரைக்கதை,  வசனம், இயக்கம் – விஜய்சந்தர்.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம்  முழுவதும் வெளியாகிறது.

இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

Our Score