full screen background image

அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு விருது.

அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு விருது.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குநர் வஸந்த் எஸ்.சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.   

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ‘மயக்கம் என்ன’ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து  மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு திரைப்ப்ட விழாக்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இயக்குநர் வஸந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23-வது கேரள சர்வதேச திரைப்பட விழா, பூனே சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழாவில் ஆகியவைகளில் திரையிடப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றது.

2019-ல் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருதினைப் பெற்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச திபுரான் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவிலும் இத்திரைப்படம் கலந்து கொண்டு விருதினைப் பெற்றிருந்தது.

இப்போது கடைசியாக, அட்லாண்டா மாகாணத்தின் திரைப்பட விழாவிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டு, சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருதினைப் பெற்றுள்ளது.

Our Score