‘பிச்சைக்காரன்’ சசி இயக்கும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம்..!

‘பிச்சைக்காரன்’ சசி இயக்கும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம்’, ‘அரண்மனை’, ‘மாயா’, ‘பாகுபலி-1’, ‘சென்னை-28-II’, ‘இது நம்ம ஆளு’, ‘காஞ்சனா’, ‘சிவலிங்கா(தெலுங்கு)’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் P.பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக புதிய படங்களை தயாரிக்கவுள்ளார்.

முதல் படமாக, ‘சொல்லாமலே’ துவங்கி ‘பிச்சைக்காரன்’வரை உணர்வுகளை மையப்படுத்தி அதை ஜனரஞ்சகமான முறையில் வெளிபடுத்தும் வித்தைக்காரராக இருக்கும் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகும் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’  என்று தலைப்பு வைத்திருக்கிறார் சசி.

அக்காள் – தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் சசி. 

இந்தப் படத்தில் அக்காவாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லிஜோ மோள் நடிக்கிறார். இது இவரது முதல் தமிழ்ப் படமாகும். இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

தயாரிப்பு – ரமேஷ் P பிள்ளை (அபிஷேக் பிலிம்ஸ்), கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சசி, ஒளிப்பதிவு – பிரசன்னா S.குமார். இசை – சித்து குமார் (அறிமுகம்). படத் தொகுப்பு – ஷான் லோகேஷ். கலை – மூர்த்தி. பாடல்கள் – மோகன் ராஜன், தமயந்தி, சண்டை பயிற்சி – சக்தி சரவணன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

படத்தில் டிராபிக் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிகர் சித்தார்த் நடிக்க, இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில் பைக் ரேசராக நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் காஷ்மீரா (தமிழில் அறிமுகம்), மதுசூதனன், நக்கலைட் யூ டுயுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

Our Score