சில்க் ஸ்மிதா பாணியில் சோனா நடித்திருக்கும் ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படம்

சில்க் ஸ்மிதா பாணியில் சோனா நடித்திருக்கும் ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படம்

இதுவரை கவர்ச்சி நடிகையாகவே தமிழ்ச் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த நடிகை சோனா, முதல்முறையாக கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் ‘சிவப்பு மனிதர்கள்’.

இந்தப் படத்தை B.T.K. பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.டி.அரசகுமார் தயாரித்துள்ளனர். அன்பு சரவணன் என்னும் அறிமுக இயக்குநர் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த ‘சிவப்பு மனிதர்கள்’ படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மீனாட்சி சர்க்கார், புதுமுகம் சத்யா, அனு கிருஷ்ணா, கருத்தம்மா’ ராஜஸ்ரீ, ராஜசிம்மன், கஞ்சா கருப்பு, ஆதிஷ் பாலா, பெஞ்சமின், வேல்முருகன், சந்தியா, லேகாஸ்ரீ, உமா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில், நடிகை சோனா ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். “நான் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாப்பாத்திரம், ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா நடித்திருந்த கேரக்டரைபோல சிறந்த கேரக்டர்..” என்கிறார் நடிகை சோனா.

Our Score