full screen background image

நீதிமன்றக் காட்சிகளால் பேசப்பட இருக்கும் ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படம்

நீதிமன்றக் காட்சிகளால் பேசப்பட இருக்கும் ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படம்

BTK FILMS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் B.T.அரசகுமார் M.A., தயாரிப்பில் இயக்குநர் அன்பு சரவணனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சிவப்பு மனிதர்கள்’.

கதையின் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக், மற்றும் கதையின் நாயகியாக கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தின் நாயகியான மீனாட்சியும் நடிக்கின்றனர். மேலும், மற்றொரு இளம் ஜோடியாக புதுமுகம் சத்யா மற்றும் அனு கிருஷ்ணா இருவரும் நடித்துள்ளனர்.  

இந்தப் படத்தில் புரட்சிகரமான ஒரு வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமாரும், மற்றொரு வக்கீலாக லிவிங்ஸ்டனும் நடிக்க, நீதிபதியாக சமீபத்தில் மறைந்த கவிஞர் பிறைசூடன் நடித்துள்ளார்.

மேலும் கஞ்சா கருப்பு, ராஜசிம்மன், சோனா, கருத்தம்மா’ ராஜஸ்ரீ, பிக் பாஸ்’ ரேஷ்மா, சந்தியா, பெஞ்சமின், வேல்முருகன், ஆதேஷ் பாலா, சின்ராசு, லேகாஸ்ரீ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சீனுவாச கதிர் கலை இயக்குநராக பணியாற்ற, எம்.தங்கபாண்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கீர்த்தி படத் தொகுப்பு செய்ய, விஜய் மந்தாரா இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா, இயக்குநர் அன்பு சரவணன் இருவரும் பாடல்களை எழுத, ரவி தேவ், பவர் சிவா நடனம் அமைத்துள்ளனர். தீப்பொறி’ நித்யா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

சமூக கருத்து பேசும் பொழுதுபோக்கு திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, சமூகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி இந்திய திரையுலகில் இதுவரை சொல்லப்படாத சட்டத்தின் மறுபக்கத்தை சொல்லி மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்த இருக்கிறது இந்த ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படம்.

ஜாதி, மதம், இனம், மொழி கடந்த அபூர்வமான உணர்வு காதல். இங்கு இணைந்த காதலர்களைவிட பிரிந்தவர்கள்தான் அதிகம். இந்த ‘சிவப்பு மனிதர்கள்’ படத்தில் காதல் சார்ந்த உணர்வுகள் எதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. பல எதிர்ப்புகளை கடந்து காதலர்கள் இணைய நினைக்கையில் பல தடைகள் ஏற்பட்டு பல கொலைகளும் விழுகிறது.

இறுதியில் நீதிமன்றத்தை நாட நீதிமன்றத்தில் நடைபெறும் விறுவிறுப்பான வாதாடல்கள் அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்று பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Our Score