full screen background image

புறாவை மையப்படுத்திய வித்தியாசமான கதைப் பின்னணியில் ‘சிவலிங்கா’ திரைப்படம்..!

புறாவை மையப்படுத்திய வித்தியாசமான கதைப் பின்னணியில் ‘சிவலிங்கா’ திரைப்படம்..!

கன்னடத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘சிவலிங்கா’ படத்தை இயக்குநர் பி.வாசு தமிழில் ரீமேக் செய்துள்ளார்.

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா, சந்தான பாரதி, சக்திவாசு, பிரதீப் ராவத், ஜெயப்பிரகாஷ், வி.டி.வி.கணேஷ், மதுவந்தி அருண், மதுமிதா, பரத் கல்யாண் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஊர்வசி லாரன்சின் அம்மாவாகவும், கதாநாயகி ரித்திகா சிங்கின் அம்மாவாக பானுப்பிரியாவும் நடித்துள்ளனர்.

sivalinga-working-stills-2

இயக்கம் – பி.வாசு, தயாரிப்பு – ஆர்.ரவீந்திரன், ஒளிப்பதிவு – சர்வேஷ் முராரி, இசை – எஸ்.எஸ்.தமன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – ஜி.துரைராஜ், பாடல்கள் – விவேகா, நடனம் – ராகவா லாரன்ஸ், சிவா லாரன்ஸ், பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி – அனல் அரசு, தளபதி தினேஷ், மாஸ் மாதா, சிகை அலங்காரம் – ஏ.சப்தகிரிவாசன், புகைப்படம் – பி.ஜெயராமன், விஷுவல் எபெக்ட்ஸ் – இளங்கோ, சுபீஷ், சிறப்பு சப்தம் – சி.சேது, டிடிஎஸ் வல்லுநர் – கிருஷ்ணமூர்த்தி, டிஸைனர் – பவன் குமார், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – கோடா கிரிஷ், தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.என்.அஷ்ரப், டி.எஸ்.செல்வராஜ், மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.எஸ்.பழனியப்பன், ஆர்.விக்ரமன், இணை தயாரிப்பு – ஜெ.அப்துல் லத்தீப்.

இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முடிந்து இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது. இதற்காக படத்தின் இயக்குநர் பி.வாசு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

sivalinga-working-stills-4

படம் பற்றிப் பேசிய இயக்குநர் பி.வாசு, “இந்த ‘சிவலிங்கா’ திரைப்படம் ஒரு கிரைம் ப்ளஸ் ஹாரர் கலந்த திரில்லர் டைப் படம். கடந்தாண்டு பிப்ரவரி 12-ம் தேதி கன்னடத்தில் இந்தப் படத்தை  இதே பெயரில் ரிலீஸ் செய்தோம். அதில் ஹீரோவாக சிவராஜ் குமார் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு.. 85 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது. ‘சந்திரமுகி’க்குப் பிறகு கன்னடத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யும் படம் இந்த ‘சிவலிங்கா’தான்.

படத்தின் கதை என்னன்னு பார்த்தீங்கன்னா.. ஒரு வாலிபன் ரெயிலில் சென்று கொண்டிருக்கிறான். கூடவே தனது வளர்ப்பு புறாவையும் கொண்டு செல்கிறான். கடைசி ரெயில் என்பதால் அந்த கம்பார்ட்மென்டில் யாருமே இல்லை. தூங்கலாம் என நினைத்துப் படுக்கிறான்.

sivalinga-working-stills-6

அப்போது அந்த கம்பார்ட்மென்டில் திடீரென்று கண் தெரியாத ஒருவன் எழுந்து, நடந்து வாசல் பக்கம் செல்கிறான். உடனே புறா அந்த வாலிபனை எழுப்புகிறது. அந்த வாலிபனும் எழுந்து குருடனை காப்பாற்ற முயற்சிக்கிறான். ஆனால், அவனோ தன்னைக் காப்பாற்ற வந்த வாலிபனை கீழே தள்ளிவிட்டு கொல்கிறான்.

கீழே விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி சின்னாப்பின்னமான அந்த வாலிபனின் ரத்தம் அவன் வளர்த்த அந்தப் புறாவின் மீது விழுகிறது. இப்போது அந்த புறாதான் இந்தக் கொலைக்கு சாட்சி.

அந்தப் புறா, இந்த கொலையை செய்தது யார் என்பது குறித்து கதாநாயகனிடம் சொல்வதுதான் கதை. புறா எப்படி சொல்கிறது என்பது ரொம்ப, ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.

sivalinga-working-stills-3

இந்த வழக்கை தற்கொலை என்று கோர்ட் முடிவு செய்துவிடுகிறது. ஆனால், இறந்து போன வாலிபனின் காதலி, இந்த வழக்கை மறுபடியும் விசாரிக்க முறையிடுகிறார். எனவே, மிகவும் ரகசியமாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் மூலம் விசாரிக்கிறார்கள்.

லாரன்ஸ் இதுவரையிலும் தான் செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சி.பி.சி.ஐ.டி. பிரிவின் போலீஸ் உயரதிகாரியாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதேசமயம் வழக்கமாக அவரது படத்தில் இருக்கும் தன்மைகளும் இருக்கும்.

ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘சந்திரமுகி’க்குப் பிறகு வடிவேலுவுக்கு இதில் பெரிய கேரக்டர். அந்த அளவுக்கு நன்றாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி.யிடம் மாட்டிக்கொண்ட திருடன் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தின் கிளைமாக்ஸும் வித்தியாசமாக இருக்கும்.

sivalinga-working-stills-5

‘சந்திரமுகி’ போன்று ‘சிவலிங்கா’வும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெளியாகிறது. இப்படத்தை உலகம் முழுவதும் 1400 தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப ‘சப்-டைட்டில்’ கொடுக்க உள்ளோம். அதற்காகவே கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் எடுத்துள்ளோம். வரும் ஜனவரி 26-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்.

Our Score