சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘ரெமோ’..!

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘ரெமோ’..!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படத்துக்கு பெயர் சூட்டிவிட்டார்கள். ‘ரெமோ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

‘ரஜினி முருகனின்’ வெற்றியினால் சிவகார்த்திகேயன் பெற்றிருக்கும் தொடர் வெற்றி விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களிடையே அவருடைய படங்களுக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் கிடைத்துள்ளது.

இப்போது சிவகார்த்திகேயன் தனது நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜாவின் தயாரிப்பில்  24 AM ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தானே தயாரித்து நடித்து வருகிறார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உடன் துணைக்கு சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

இத்தனை நாட்களாக பெயரிடப்படாமல் இருந்த இப்படத்திற்கு இன்று (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றே அறிவித்திருந்தது.

அதன்படி, படத்தின் பெயரை இன்று மாலை அறிவித்துள்ளார்கள். ‘ரெமோ’ என்பது படத்தின் பெயராம்.

இனி சிவகார்த்திகேயனை ‘ரெமோ சிவா’ என்று அழைக்கலாம்..!

Our Score