சிவகார்த்திகேயன்-இயக்குநர் பொன்ராம் திடீர் மோதல்

சிவகார்த்திகேயன்-இயக்குநர் பொன்ராம் திடீர் மோதல்

வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் பொன்ராம்.

இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் மெஹா ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பிய நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பே இல்லை என்று சமீபத்தில் நடைபெற்ற டாக்டர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் 2-வது பாகம் குறித்து சும்மா பேசினோம். ஆனால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அது ஒரு எபிக் படம். நாங்கள் எங்களையே அறியாமல் ஜாலியாக எடுத்த படம். அதைத் திரும்ப எடுக்கவே முடியாது…” என்று தெரிவித்திருந்தார்.

சிவகார்த்திகேயனின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் படத்தின் இயக்குநரான பொன்ராம், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் மெச்சூர்டு ஆகிவிட்டார். அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2” எடுப்போம். போட்றா வெடிய..” என்று தெரிவித்துள்ளார்.

Our Score