full screen background image

சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயின் வேணுமாம்..!

சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயின் வேணுமாம்..!

‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்திற்கு பிறகு லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பொன்ராம் இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார். படத்தின் பெயர் ‘ரஜினி முருகன்’. இப்போது ‘டாணா’ படத்தில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் அதை முடித்துவிட்டு வந்ததும் இந்தப் படத்தில் நடிப்பாராம்..

மற்ற தொழில் நுட்பக் கலைஞர்களையெல்லாம் பிக்ஸ் செய்தாலும், ஹீரோயின் மட்டும்தான் இடிக்கிறதாம். முந்தைய படங்களின் பாதிப்பு இதிலும் தெரியக் கூடாது என்பதால் ஸ்ரீதிவ்யா இதில் இல்லையாம்.. முந்தைய படத்தில் நடித்த ஹன்ஸிகா மோத்வானியும் இந்தக் கதைக்கு செட்டாக மாட்டாராம்.. காஜல் அகர்வால், நயன்தாரா என்று தேடினால் பட்ஜெட் உதைக்கிறதாம்..

‘முன்னாடி போனா கடிக்குது.. பின்னாடி வந்தா உதைக்குது’ கதையாக இப்போது முற்றிலும் புதுமுகத்தை நடிக்க வைக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். கோடம்பாக்கத்தில் ஏகப்பட்ட ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் சொன்னாலே பிளைட் பிடித்து அழைத்து வந்து முன்னால் நிறுத்திவிடுவார்கள். ஆனால் இப்போதுதான் இணையத்தள வசதிகளும், மீடியாக்களும் பெருகிவிட்டதால் இணையத்திலும் தங்களது தேடுதல் வேட்டையைத் துவக்கியிருக்கிறார் பொன்ராம்.

heroine-search-ponram

“இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒரு புதுமுகம் தேவை…” என்று வெளிப்படையாக சொல்லியே விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் 5 அடி 7 அங்குல உயரத்தில் 17 முதல் 24 வயதில்தான் நாயகி இருக்க வேண்டுமாம்.

அடுத்த ஊதா கலரு ரிப்பனை அணியப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி ஹீரோயின் யாரோ…?

Our Score