full screen background image

ரஜித்மேனன், தீப்ஷிகா நடிக்கும் ‘சிட்டுக் குறிஞ்சி’ திரைப்படம்!

ரஜித்மேனன், தீப்ஷிகா நடிக்கும் ‘சிட்டுக் குறிஞ்சி’ திரைப்படம்!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ்  தயாரிப்பில் உருவாகி வரும், வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி அம்சங்கள் கலந்த தமிழ் திரைப்படம் ‘சிட்டுக் குறிஞ்சி’.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.  

காதல், நகைச்சுவை, ஃபேன்டஸி ஆகியவற்றை புதுமையான திரைக்கதையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் திரையனுபவத்தை வழங்கும் படைப்பாக இந்த ‘சிட்டுக் குறிஞ்சி’ படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் தீப்ஷிகா, நக்ஷா சரண், வி.ஜே. பப்பு, ஜி. எம். குமார், எல். வி. ஆதவன், ராம்ஸ், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா, ஈஸ்வர்பாபு, சத்யசீலன், வேளச்சேரி ஸ்ரீதர், மஞ்சு, ஜோன்ஸ், கிருஷ்ணகுமார், அட்வகேட் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீராம் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் பிரம்மாண்டமான தொழில் நுட்ப உருவாக்கம் அமைந்துள்ளது.

1983-ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்காக, கொடைக்கானல் பள்ளங்கி மலைப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய கிராம செட் அமைக்கப்பட்டு, அந்தக் காலகட்டத்தின் இயல்பான சூழல் தத்ரூபமாக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்தின் பின்னணி இசை உலகப் புகழ் பெற்ற ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் அமைந்துள்ள Budapest Scoring Company ஸ்டுடியோவில், சர்வதேச இசைக் கலைஞர்கள் பங்கேற்ற நேரடி (LIVE) ஆர்கெஸ்ட்ரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரசிகர்களுக்கு உலகத் தரத்திலான இசை அனுபவத்தை வழங்க படக் குழு உறுதியாக நம்புகிறது.

இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர்  மாறா இசையமைத்துள்ளார். பிரான்சிஸ் ராஜ்குமார் A. ஒளிப்பதிவையும், மகேந்திரன் கணேசன் படத் தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

டி. ஜூட் ஆனந்த் தயாரித்துள்ள இந்தப் படம், வித்தியாசமான கதைக் களம், பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் காதல், நகைச்சுவை, ஃபேன்டஸி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களால் ரசிகர்களை வெகுவாக கவரும் என படக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் இதர அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நடிகர், நடிகைகள் :

ரஜித் மேனன்
ஸ்ரீராம் கார்த்திக் (சிறப்பு தோற்றம்)
தீப்ஷிகா
நக்ஷா சரண்
வி.ஜே. பப்பு
ஜி. எம். குமார்
எல். வி. ஆதவன்
ராம்ஸ்
ஹலோ கந்தசாமி
தேனி முருகன்
சுஜாதா
கராத்தே ராஜா
ஈஸ்வர்பாபு
சத்யசீலன்
வேளச்சேரி ஸ்ரீதர்
மஞ்சு
ஜோன்ஸ்
கிருஷ்ணகுமார்
அட்வகேட் பாபு

தொழில்நுட்பக் குழு :

கதை, திரைக்கதை, இயக்கம்: வி.ஜே. மீனாட்சி சுந்தரம்
தயாரிப்பு: டி. ஜூட் ஆனந்த்
இசை: மாறா
ஒளிப்பதிவு: பிரான்சிஸ் ராஜ்குமார் A.
படத்தொகுப்பு: மகேந்திரன் கணேசன்
கலை இயக்கம்: ராம்ஜி
நடன அமைப்பு: தீனா
ஒலிக்கலவை: டோனி J
குரல் பதிவு :முகமது ரிஸ்வான்
SFX: கிஷோர் காமராஜ்
Folly : தினேஷ் நாராயனன்
VFX : ஜீவரத்தினம் ரா
ஆடை வடிவமைப்பு: ஹரிவர்தனி
ஆடை அலங்காரம்: எஸ். பி. சுகுமார்
ஒப்பனை: வேல்முருகன்
விளம்பர வடிவமைப்பு: தமிழ்ச்செழியன்
இணைத் தயாரிப்பாளர்: டாக்டர் கே. எஸ். செந்தில் (சசிராம் பிக்சர்ஸ்)
நிர்வாகத் தயாரிப்பாளர்: என். குழந்தைவேலு (மஞ்சு சினி எக்யூப்மெண்ட்ஸ்)
மக்கள் தொடர்பு: ரியாஸ் K. அகமது, பாரஸ் ரியாஸ்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: ஏ. எஸ். பக்தீஸ்வரன், ஆர்.ஜே. முகமது ரஃபி மீரான், ஸ்ரீநிதி பக்தீஸ்வரன்
ஆடியோ உரிமை: சரிகமா இந்தியா லிமிடெட் (RPSG Group)

Our Score