Home Movie Makers நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், ஜெயம் ரவியின் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படம் ‘சைரன்’.
இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டுவிதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரக்கனியும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
எழுத்து இயக்கம் – ஆண்டனி பாக்யராஜ், தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார், இணை தயாரிப்பு – அனுஷா விஜய்குமார், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – செல்வகுமார் S.K., படத் தொகுப்பு – ரூபன், தயாரிப்பு வடிவமைப்பு – கே.திர், கலை இயக்கம் – சக்தி வெங்கட்ராஜ்.M, சண்டை இயக்கம் – திலிப் சுப்பராயன், நடன இயக்கம் – பிருந்தா, ஆடை வடிவமைப்பு – அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேத்தா, நித்யா வெங்கடேசன், ஒலி வடிவமைப்பு – சுரேன்.G., அழகியகூத்தன்.S, ஒப்பனை – மாரியப்பன், உடைகள் – பெருமாள் செல்வம், VFX – டிடிஎம் லவன் குசன், விளம்பர வடிவமைப்பு – யுவராஜ் கணேசன், வண்ணம் – பிரசாத் சோமசேகர், DI – நாக் ஸ்டுடியோஸ், புகைப்படங்கள் – கோமளம் ரஞ்சித், நிர்வாக தயாரிப்பு – ஓமர், தயாரிப்பு நிர்வாகம் – சக்கரத்தாழ்வார்.G, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ், சிவா (AIM), மோஷன் போஸ்டர் – வெங்கி (வெங்கி ஸ்டுடியோஸ்).
‘இரும்புத்திரை’, ‘விஸ்வாசம்’, ‘ஹீரோ’ ஆகிய படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ், இந்த ‘சைரன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது.
இக்கதாப்பத்திரத்திற்காக தன் உடலை மாற்றி ஒன்றரை வருடங்கள் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அனுபவம், அமைதியும் கலந்த தோற்றத்தில், பார்க்கும்போதே பயம் தரும் கோபமான முகத்துடன், அசத்தலாக காட்சியளிக்கிறார் ஜெயம் ரவி. இதற்கு நேரெதிராக இளமையும், துள்ளலுமான இன்னொரு கதாப்பாத்திரத்திலும் அவர் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘சைரன்’ படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக நேற்றைக்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இந்த ‘சைரன்’ படத்தின் மையக் கருத்தின் ஒவ்வொரு பகுதியும் சிறிது, சிறிதாக படம் பற்றிய விளம்பரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் சைரனுடன் செல்லும் ஒரு ஆம்புலன்ஸின் புகைப்படம் டைட்டிலோடு வெளியானது. பின்னர் முதிர்ந்த தோற்றத்தில் கைதியாக ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் தோற்றம் பிரிஃபேஸ் லுக்காக வெளியானது.
தற்போது வெளியாகியுள்ள டீசர். சிறையிலிருக்கும் ஜெயம் ரவி பரோலில் வெளியில் வருவதைக் காட்டுகிறது. ஜெயிலில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவியின் குரலில் ஒரு கதையும், போலீஸாக வரும் கீர்த்தி சுரேஷ் குரலில் ஒரு கதையும் என இரண்டு கதாபாத்திரங்களின் குரலில் மொத்தப் படத்தின் மையக் கதையையும் இந்த டீசர் விவரிக்கிறது.
பரபரப்பான திருப்பங்களுடன், மாறுபட்ட கதைக் களத்தில், ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகியிருக்கும் இந்த டீசர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.