Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய படம் ‘சைரன்.’
நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிக்கிறார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
எழுத்து இயக்கம் – ஆண்டனி பாக்யராஜ் தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார், இணை தயாரிப்பாளர் – அனுஷா விஜய்குமார், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – செல்வகுமார் S.K., படத் தொகுப்பு – ரூபன், தயாரிப்பு வடிவமைப்பு – கே.கதிர், கலை இயக்கம் – சக்தி வெங்கட்ராஜ், சண்டை பயிற்சி இயக்கம் – திலிப் சுப்பராயன், நடனப் பயிற்சி இயக்கம் – பிருந்தா, ஆடை வடிவமைப்பு – அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேத்தா, நித்யா வெங்கடேசன், ஒலி வடிவமைப்பு – ஜி.சுரேன், எஸ்.அழகியகூத்தன், ஒப்பனை – மாரியப்பன், உடைகள் – பெருமாள் செல்வம், VFX – டிடிஎம் லவன் குசன். விளம்பர வடிவமைப்பு – யுவராஜ் கணேசன், வண்ணம் – பிரசாத் சோமசேக, DI – நாக் ஸ்டுடியோஸ், புகைப்படங்கள் – கோமளம் ரஞ்சித், நிர்வாக தயாரிப்பாளர் – ஓமர், தயாரிப்பு நிர்வாகி – ஜி.சக்கரத்தாழ்வார், தயாரிப்பு மேலாளர்- அஸ்கர் அலி, பத்திரிகை தொடர்பு – சதீஷ்(AIM), மோஷன் போஸ்டர் – வெங்கி (வெங்கி ஸ்டுடியோஸ்).
‘இரும்புத் திரை’, ’விஸ்வாசம்’, ‘ஹீரோ’ ஆகிய படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் காட்சித் துணுக்கு படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.