விடாக்கொண்டன் கொடாக்கொண்டனாக இருக்கிறார் ‘லிங்கா’ விநியோகஸ்தர் சிங்காரவேலன்.
இவரது தொடர் போராட்ட அறிவிப்புகளால் கதிகலங்கிப் போன தயாரிப்பாளர் சங்கம் இவருக்கும், இவரது நட்பு விநியோகஸ்தர்களுக்கும் ரெட்கார்டு போட்டுவிட்டது.
தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் யாரும் சிங்காரவேலன் அண்ட் கோ-விற்கு படங்களை விநியோகம் செய்ய கொடுக்க்க் கூடாது. வேறு எந்த வகையிலும் இவர்களுடன் வியாபார தொடர்பு வைத்துக் கொள்ளவும் கூடாது என்று ‘தடா’ உத்தரவு போட்டுவிட்டது.
கடைசியாக தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு மனுவொன்று அளித்துவிட்டு காத்திருந்த சிங்காரவேலன், அங்கிருந்து அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்படியே இப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் திருப்பூர் சுப்ரமணியம், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு ஆகியோர் மீது புகார் மனு கொடுத்திருக்கிறார்.
அந்த மனுக்கள் இங்கே :