‘டிக் டிக் டிக்’ படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் வில்லனாக அறிமுகமாகிறார்

‘டிக் டிக் டிக்’ படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் வில்லனாக அறிமுகமாகிறார்

தயாரிப்பாளர் v.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரொடெக்சன்ஸ் தயாரிப்பான ‘டிக் டிக் டிக்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது பிரம்மாண்டாக மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடைபெற்று வருகிறது.

ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் ‘டிக் டிக் டிக்’. விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் இந்திய படமாக உருவாகும் இப்படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Pic (1)

வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆரோன் அஜீஸ் ‘KL Gangster’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர். பல இந்திய படங்களுக்காக அணுகியும் நடிக்க ஒப்புகொள்ளாத ஆரோன் அஜீஸ் ‘டிக் டிக் டிக்’ திரைக்கதையை படித்ததும் மிகவும் பிடித்து போக உடனே தனது சம்மதத்தை தெரிவித்தார்.

முதல் விண்வெளி படம், ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி, பிரம்மாண்ட தயாரிப்பு வரிசையில் ஆரோன் அஜீஸின் வருகை இப்படத்தின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் வளர்த்து கொண்டே போகிறது.