அரவிந்த்சாமி, ரித்திகா சிங் கூட்டணியில் சிம்ரனும் சேர்கிறார்..!

அரவிந்த்சாமி, ரித்திகா சிங் கூட்டணியில் சிம்ரனும் சேர்கிறார்..!

இயக்குநர் செல்வாவின் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங் நடிக்கும் படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் ‘மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3.’

இந்தப் படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாகவும், ரித்திகாசிங் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இத்திரைப்படம் சென்ற வாரம் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார்.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, மற்றும் சாந்தினி, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட், O.A.K. சுந்தர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கோகுல், இசை - டி. இமான், படத் தொகுப்பு ஆண்டனி, கலை - சிவா யாதவ், எழுத்து, இயக்கம் – செல்வா.

இப்போது இந்தப் படத்தில் இடையழகி சிம்ரனும் நடிக்கவிருப்பதாக இன்று அறிவித்துள்ளார்கள். சமீப காலமாக நடிகை சிம்ரன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பெறுகிறது.

இப்படத்தில் எதிர்பார்ப்பைக் கூட்டும் அளவுக்கு நடிகர், நடிகைகள் நடிப்பதால் படத்தின் வியாபாரம் இப்போதே சூடு பிடித்துள்ளதாகத் தெரிகிறு.

படத்தின் தலைப்பு ‘வணங்காமுடி’ என அனைவரும் கூறி வருகின்றனர். அது தவறான தகவலாம். பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு, விரைவில் வெளிவருமாம்.