full screen background image

கமலுக்கு ஜோடியாக நான் நடிக்கவில்லை – சிம்ரனின் அறிக்கை..!

கமலுக்கு ஜோடியாக நான் நடிக்கவில்லை – சிம்ரனின் அறிக்கை..!

‘உத்தமவில்லன்’ படத்திற்குப் பிறகு கமல் நடிக்கவிருக்கும் ‘திருஷ்யம்’ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமலுக்கு ஜோடி யார் என்ற கேள்வி சென்ற மாதம் முழுக்க இணையத்தில் அலசி ஆராயப்பட்டது..

மலையாளத்தில் நடித்த மீனாவே கமலுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று ஆரூடம் வாசித்தார்கள். பின்பு நதியாவை கேட்டிருப்பதாக சுவடி பார்த்து அருள் வாக்கு மொழிந்தார்கள். அப்புறம் சிம்ரனை அணுகியிருப்பதாக உளுந்தூர்பேட்டை கிளி ஜோஸியர் சொன்னதாகச் சொன்னார்கள்.. இடையில் குழந்தை பெற்று குண்டடித்து வீட்டில் ரெஸ்ட்டில் இருக்கும் நடிகைகள் அனைவரையும் இணைத்து வைத்து பேசினார்கள்.. ம்ஹூம்.. கலைஞானியோ, படத்தின் இயக்குநரோ இதுவரையிலும் அது பற்றி வாயைத் திறக்கவில்லை..!

ச்சும்மா நம்ம பேரு இடைல வந்து பல்லுல சிக்கின சிக்கன் துண்டு மாதிரி அல்லாடுதேன்னு நினைச்ச முன்னாள் இடையழகி சிம்ரன் இன்றைக்கு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். 

“I’m not doing any role in any language in any remake of Drishyam.  I shall reveal my professional plans to the media at the appropriate time.”

இன்றைய தேர்தல் நிலவர அறிக்கைகளைவிட இந்த அறிக்கைதான் இன்றைக்கு பத்திரிகைகளில் சூடாக வலம் வரும் என்று நினைக்கிறோம். சரி.. இவ்ளோதான் கதை.. விஷயம் முடிஞ்சது.. அடுத்து எந்த ஹீரோயின் வீட்ல சும்மா உக்காந்திருக்கான்னு தேடுங்கப்பா.. இன்னும் கொஞ்ச நாள் நமக்கு பொழுதாச்சும் போகும்..!

வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்க தெலுங்கில் தயாராகும் படத்தில் மீனாவும், நதியாவும் நடிகை ஸ்ரீபிரியாவின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பது மட்டும் இப்போதுவரையிலும் உண்மையான செய்தியாக உள்ளது.

தமிழில் கமலுக்கு ஜோடியாக மீனாவும், அஸிஸ்டெண்ட் கமிஷனர் கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனும் நடித்தால் ஜோராக இருக்கும் என்பது நமது கருத்து..

கலைஞானிகூட இத்தனை ரசனையோட ஹீரோயின்களை தேட மாட்டாரு..! சேர்த்து வைக்கத்தான் எத்தனை பேருக்கு எம்புட்டு ஆசை..?

Our Score