full screen background image

“சிம்பு பிடித்தது பிளாஸ்டிக் பாம்பு…” – தயாரிப்பாளர் தரப்பு தகவல்..!

“சிம்பு பிடித்தது பிளாஸ்டிக் பாம்பு…” – தயாரிப்பாளர் தரப்பு தகவல்..!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் படத்தின் நாயகனான சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகங்களில் வீடியோவாக வெளியானது.

இதைப் பார்த்து சமூக ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் கொடுத்தார். இந்தப் புகாரையடுத்து இது குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பு தரப்பு செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், “உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது.

இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்றவர்கள் மூலமாகவோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

கணினி கிராபிக்ஸ் செய்யும்போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பது பற்றி நாங்கள் தற்போது விசாரித்து வருகின்றோம்.

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார்.

நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவுபடுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம்.

படத்தின் முழு படப்பிடிப்பும் தமிழக அரசின் வழிகாட்டிதலைக் கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது…” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Score