‘இது நம்ம ஆளு’ படத்துல இந்த ஜோடி சேர்ந்தாலும் சேர்ந்தாங்க.. அன்னிலேர்ந்து இப்போவரைக்கும் படத்துக்கு விளம்பரம் கூடுதோ இல்லையோ.. அவங்க ரெண்டு பேருக்கும் எகிறியிருக்கு விளம்பரம்..!
“இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து நடிக்க வைச்சதுல என்ன பொல்லாத சாதனை இருக்கு..?” என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்..
அவர் இது பற்றி சமீபத்திய ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்குக் கொடுத்திருக்கும் பேட்டியில், “ஒரு தடவை உதவி இயக்குநர்களுடன் இந்தப் படம் பற்றிய கதை விவாதத்தில் இருந்தபோது ஒரு உதவி இயக்குநர், ‘சிம்பு-நயன்தாரா இந்தப் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்’னு சொன்னான். கூடவே ‘அது சாத்தியமில்லையே’ன்னும் சொன்னான். ‘அது ஏன் சாத்தியமில்லை’ன்னு நினைச்சுத்தான் அவங்க ரெண்டு பேரையும் இதுல நடிக்க வைக்க முயற்சித்தேன். கதையைக் கேட்டுட்டு, உடனேயே இருவரும் நடிக்க ஒத்துக்கிட்டாங்க. உண்மையில் நடந்தது இதுதான். இதை சிலர் ஏதோ நான் பெரிய சாதனை பண்ணிட்ட மாதிரி பேசுவது வேதனையாக இருக்கிறது.. சிம்பு-நயன்தாரா காதலில் பிரிந்துவிட்டாலும், கடந்த 2 வருடங்களாக நல்ல நண்பர்களாகத்தான் இருந்து வருகின்றனர்..” என்று சொல்லியிருக்கிறார்.
மீடியாக்கள் ‘சாதனை’ன்னு சொல்றதை நினைச்சு இயக்குநர் பாண்டிராஜ் ஏன் வேதனைப்படணும்னு தெரியலை. ஆனா அவர் சிம்புவைப் பத்தி சொல்லியிருக்கிற இன்னொரு விஷயத்தைப் படிச்சா, இயக்குநர் பாண்டிராஜின் கள்ளங்கபடமில்லாத மனசை பார்த்து இந்த நாடே வேதனைப்படணும்னு தோணுது..
“சிம்புவை பத்தி சொல்லணும்னா.. சிம்புவுக்கும், வெளி உலகத்தில் அவரைப் பற்றி பேசப்படும் பிம்பத்திற்கும் சம்பந்தமேயில்லை. சிம்பு ஒரு வளர்ந்த குழந்தை. வீட்டில் என் மகன் அன்பு செய்யும் சேட்டையை ரசித்து அனுபவிப்பதுபோல.. ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு செய்யும் சேட்டைகளையும் ரசிக்கிறேன்.. என் மகன் அன்பு மூன்று வருட குழந்தை. சிம்பு 30 வருட குழந்தை..” என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
இதை டி.ஆர். கூட சொல்ல மாட்டாரே ஸார்..?