தமிழ், மலையாளத்தில் வெளியாகவிருக்கும் ‘ஷித்தி’ திரைப்படம்

தமிழ், மலையாளத்தில் வெளியாகவிருக்கும் ‘ஷித்தி’ திரைப்படம்

மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கும் திரில்லர் படம் SIDDY(ஷித்தி).

இந்தப் படத்தை Surya film productions சார்பாக மகேஸ்வரன் நந்தகோபால் தயாரிக்கிறார்.

மலையாள சினிமாவில்  இயக்குரும், ஹீரோவான அஜிஜான் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.  இந்திய கால்பந்தாட்ட வீரரும், நடிகருமான விஜயன் போலீஸ் அதிகரியாகவும், அக்க்ஷயா உதயகுமார், ஹரிதா ஹரிதாஸ் மற்றும் தனுஜா கார்த்திக் மற்றும் பல பிரபலங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ரமேஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இயக்குநர் பயஸ் ராஜ் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார்.

குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும், மனதோடும் நடக்கும் சம்பவங்கள்  விறுவிறுப்பான வகையில் படமாக்கப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும், ஒளியமைப்பும் இந்தபடத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.  

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் சுற்றுலா ஸ்தலமான கோவளம், திருவனந்தபுரம் மற்றும் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.  ஆழ் கடலிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர் படக் குழுவினர்.

இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

 
Our Score