சித்தார்த் நடிக்கும் ‘சைத்தான் கி பாச்சா’

சித்தார்த் நடிக்கும் ‘சைத்தான் கி பாச்சா’

நடிகர் சித்தார்த்தும் அடுத்தடுத்து படங்களை அறிவிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது அவர் ‘பிச்சைக்காரன்’ படத்தினை இயக்கிய சசி இயக்கத்தில் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நேரத்திலேயே தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பையும் சொல்லியிருக்கிறார். ‘கப்பல்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி.கிரிஷ்தான் சித்தார்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போகிறவர்.

படத்திற்கு மிக, மிக வித்தியாசமான தலைப்பாக ‘சைத்தான் கே பாச்சா’ என்று பெயரிட்டுள்ளார்கள். பெயரிலேயே ‘சைத்தான்’ இருப்பதால் இந்தப் படமும் நிச்சயம் பேய்ப் படமாகத்தான் இருக்கும் என்று நம்பலாம்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளாராம். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

Our Score