தமிழ்ச் சினிமாவுலகத்தில் ஒளிப்பதிவாளர்களுக்கென்று SICA எனப்படும் ‘தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் தனி சங்கம் உள்ளது.
இந்த சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததால் 2023-2026-ம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
வேட்பு மனு தாக்கலின்போது SICA Welfare Team என்ற பெயரில் போட்டியிட்ட அணியினர் ஒட்டு மொத்தமாக போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் தலைவராக ஏ.கார்த்திக் ராஜா
செயலாளராக – எம்.இளவரசு
பொருளாளராக – சக்தி சரவணன்
துணைத் தலைவர்களாக – ஆர்தர் வில்சன், நீரவ்ஷா
இணைச் செயலாளர்களாக – ஆர்.திவாகரன், சேவிலோ ராஜா, எம்.வெற்றிவேல்
இணை உறுப்பினர்களாக – அருண்குமார், மோசஸ் ஜஸ்டின், ஆர்.முத்துக்குமார்
டிவி மீடியா உறுப்பினர்களாக – எஸ்.கோவிந்தகிருஷ்ணன், I.மார்ட்டின்ஜோ, நாகசரவணன்
ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆக்டிவ் உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே தேர்தல் நடந்துள்ளது. இந்தத் தேர்தலின் முடிவில் தேவ் மேக்யூ ஆரி, சி.ஜார்ஜ் வில்லியம்ஸ், ஜெ.கோபிநாத், எம்.எஸ்.லட்சுமி பிரபாகர், எஸ்.லோகநாதன், ராஜேஷ் யாதவ், கே.ரவிஷங்கரன், ஆர்.எஸ்.சரவணன், ஆர்.வேல்ராஜன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்..!









