சென்ற வாரம் முழுக்க தமிழ்ச் சினிமா இதழ்களில், இணையத்தளங்களில் தவிர்க்க முடியாமல் இடம் பெற்ற புகைப்படம் இதுதான்.
நடிகை ஸ்ருதிஹாசனின் ஹாட்டஸ்ட் புகைப்படங்கள் என்ற தலைப்பில் கண்ணைக் கட்டினாலும், ‘நம்ம கமல்ஹாசன் பொண்ணு.. இப்படியெல்லாம் நடிக்கலாமா?’ என்றெல்லாம் சினிமாவுலகில், பத்திரிகையுலகில் கிசுகிசு பேச்சுகள் தொடர்ந்தன.
ஆனாலும் ஸ்ருதி இந்த விஷயத்தில் தெளிவாகவே இருக்கிறார். “இது நடிப்பு. இது எனக்குப் பிடிக்குது. எனக்குன்னு ஒரு லிமிட் இருக்கு. அது எனக்குத் தெரியும். அதோட நான் நிறுத்திக்குவேன்.. யாரும் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம்…” என்று வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறாராம்.
இவரது தந்தையும் இதே கொள்கையில் உறுதியுடன் துவக்கத்திலே இருந்துவிட்டதால் இப்போது புள்ளை பதினாறடி பாய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இப்புகைப்படங்கள் உண்மைதானா என்கிற சர்ச்சையும் எழுந்தது. ஏனெனில் ஒரு சில படங்களில் ஸ்ருதியின் கழுத்து பகுதியில் கட் காப்பி பேஸ்ட் செய்ததுபோல தெரிந்தது.. இதையும் விசாரித்ததில் அனைத்துமே உண்மையான புகைப்படங்கள்தான் என்பது தெரிந்தது.
ஸ்ருதி, ராம்சரண் தேஜாவுடன் இணைந்து நடித்திருக்கும் ‘யெவடு’ என்ற படத்தின் ‘பிம்பிள் டிம்பிள்’ என்ற பாடல் காட்சியில்தான் இப்படி கலர் கலராக தோன்றியிருக்கிறார். படம் இன்னமும் சென்னையில் ரிலீஸாகவில்லை என்று தெரிகிறது.
இந்தப் பாடலின் காணொளி இதோ உங்களுக்காக :
Song Name : Pimple Dimple
Movie Name : Yevadu
Banner : Sri Venkateswara Creations
Producer: Dil Raju
Director: Vamshi Paidipally
Music Director : Devi Sri Prasad
Lyrics : Ramajogayya Sastry
Singers :Sagar, Ranina Reddy
வீடியோ உதவிக்கு நன்றி : ஆதித்யா மூவிஸ்