மெகா இயக்குநர் ஷங்கர், ராம் சரண் இணையும் படம் பூஜை நிகழ்வுடன் இன்று ஐதராபாத்தில் துவங்கியது.
இந்தப் படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி, தில் ராஜூ, சுனில், நவீன் சந்திரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இன்னும் பெயர் சூட்டப்படாததால் ஆர்.சி.15 என்ற பெயரால் இந்தப் படம் அழைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. படத்தின் பட்ஜெட் 200 கோடிக்கும் அதிகம் என்பதும் கூடுதல் தகவல்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இந்த பூஜை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிரஞ்சீவி, இயக்குநர் ராஜமவுலி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் ஜெயராம், நடிகை கியாரா அத்வானி, நடிகை அஞ்சலி மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
ஷங்கர் இந்தப் படத்திற்கு அடுத்து இந்தியில் இயக்கவிருக்கும் ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்கில் நாயகனாக ரன்வீர்சிங்குதான் நடிக்கவிருக்கிறார்.